முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் நரேந்திர மோடி.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?



Modi wishes to mk Stalin

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தனது பிறந்த நாளை தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் எளிமையாக கொண்டாடுங்கள் என்று அவர் கேட்டு கொண்டார். 

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து,  தங்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நான் பாடுபடுவேன் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.