மக்கள் தலையில் பாரத்தை போட்ட மத்திய அரசு.. விலை கிடுகிடு உயர்வு.. உச்சகட்ட கண்டனம்.!
போர்ப்பதற்றம் காரணமாக அதிகரித்துள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கூறி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போர்ப்பதற்றம்:
Petrol Diesel Price Today in Chennai: வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் என்பது மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிந்து புதிய அரசு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று திடீரென மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை அதிகரித்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மக்களுக்கு ஷாக்.. நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு.. உணவுகளின் விலையும் உயரும் அபாயம்.!

விலை உயர்வு:
இதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோலின் விலை தற்போது ரூ.103.67 க்கும், டீசல் விலை ரூ.95.25 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய தினசரி பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல ஹோட்டல்களில் உணவுக்கட்டணம் உயர்வு, ஒருசில ஹோட்டலில் சிலிண்டருக்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மு.க. ஸ்டாலின் கண்டனம்:
இந்த விசயத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் & திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது வலைப்பக்கத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் பதிவில், "மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.

இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?" என கூறியுள்ளார்.
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
— M.K.Stalin (@mkstalin) May 15, 2026
ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின்… https://t.co/z2wSUqNZ4p
இதையும் படிங்க: சிலிண்டர் விலை இன்று... மாதத்தின் முதல் தேதியில் வந்தது முக்கிய செய்தி. இறங்கிய இடி..!