நினைத்தது ஒன்னு.... நடந்தது இன்னொன்னு..! முதல்வர் விஜய் வைத்த செக்... ஆடிப்போன அழகிரி மகள்! அதிருப்தியில் அரசியல் வட்டாரம்!!!



mk-alagiri-daughter-kayalvizhi-tvk-talks-stalled

மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மாற்று அரசியல் பாதையை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், அவரது மகள் கயல்விழி தவெகவில் இணையலாம் என்ற தகவல் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால், கட்சியில் சேர்வதற்கு முன் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நிபந்தனையால் அந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைவரை சந்தித்த கயல்விழி

கயல்விழி, தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதுடன், பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வரையும் அமைச்சர்களையும் நேரில் சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து அவர் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவானது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!

மேயர் பதவி குறித்து முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் நிபந்தனை

தகவலின்படி, கட்சியில் இணைவதற்கு முன்பாக மதுரை மாநகராட்சி மேயர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கயல்விழி முன்வைத்ததாக கூறப்படுகிறது. திமுக குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய வாரிசு ஒருவர் கட்சியில் இணைவது அரசியல் ரீதியாக பலம் சேர்க்கும் என்ற நோக்கில் ஆரம்ப கட்ட பேச்சுகள் நடந்தாலும், பதவியை முன் நிபந்தனையாக வைப்பதை கட்சித் தலைமையினர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

தொண்டர்களுக்கே முன்னுரிமை என தவெக நிலைப்பாடு

இந்த விவகாரம் கட்சித் தலைவர் தவெக விஜயின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வரும் தொண்டர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பதவிக்காக கட்சியில் இணைவோருக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் அவர் தெளிவாக தெரிவித்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கயல்விழியுடனான பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், இந்த முடிவால் மு.க.அழகிரி தரப்பில் அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... ஓப்பனாக மேயர் பதவி கேட்ட கயல்விழி..! உடனே செக் வைத்த முதல்வர் விஜய்! அரசியல் கணக்கை கேட்டு அதிர்ந்துப்போன கயல்விழி!!!