"உபியாக இருப்பது ரொம்ப கஷ்டம்ப்பா" - அமைச்சர் கே.என் நேருவை அப்பட்டமாக விமர்சித்த நடிகை கஸ்தூரி.!Minister KN Nehru Troll By Actress Kasthuri Shankar

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பவுன்சர் போல செயல்பட்ட அமைச்சரை நடிகை விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திமுக சார்பில் வரவேற்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அப்போது, திராவிட முன்னேற்ற கழகத்தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கை குலுக்கவும், சால்வை அணிவித்து மரியாதை செய்யவும் தயாராகினர். 

அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், நிகழ்விடத்தில் இருந்த அமைச்சர் கே.என் நேரு, உதயநிதி ஸ்டாலினை ஆவலோடு பார்க்க வந்த தொண்டர்களை பிடித்து இழுத்து வேகமாக தள்ளிக்கொண்டு இருந்தார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகின. 

இந்நிலையில், அமைச்சார் கே.என் நேரு பவுன்சர் போல செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கஸ்தூரி சங்கர், "உபியாக இருப்பது ரொம்ப கஷ்டம்" என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கள் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.