நடிகை குஷ்பு பாஜகவில் இணையப்போகிறாரா? அதிரடியாக விளக்கம் கொடுத்த குஷ்பு! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் சினிமா

நடிகை குஷ்பு பாஜகவில் இணையப்போகிறாரா? அதிரடியாக விளக்கம் கொடுத்த குஷ்பு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஒருகட்டத்தில் திமுகவிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல்காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய நவபாரக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. புதிய கல்விக்கொள்கையின் பல அம்சங்களை காங்கிரஸ் விமர்சித்துவந்த நிலையில், இதனை குஷ்பு வரவேற்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக வதந்திகள் பரவியது.  

இந்தநிலையில் இதற்க்கு விளக்கம் அளித்து மீண்டும் குஷ்பூ டுவிட் செய்துள்ளார். அதில், புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தான் பாஜகவுக்கு செல்லவில்லை என்றும், என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர் என தெரிவித்துள்ளார்.
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo