மிஸ்டர் திருமாவளவன், தைரியம் இருந்தால் இதை செய்துபாருங்கள்.! சவால் விட்ட நடிகை குஷ்பு.!

மிஸ்டர் திருமாவளவன், தைரியம் இருந்தால் இதை செய்துபாருங்கள்.! சவால் விட்ட நடிகை குஷ்பு.!



kushboo talk about thirumavalavan

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அருமனை வட்டார இந்து சமுதாயம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு உட்பட பலர் கலந்துகொண்டனர். 

அந்த விழாவில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புபேசுகையில், தேசியக் கல்வி கொள்கை வரும்போது எதிர்க்கட்சியில இருக்கிறவங்க இந்தி தினிப்பென்று சொல்கிறார்கள். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பிரதமர் ஒரு மொழியையா உங்கள்மேல் திணிக்க போகிறார்? எதிர்கட்சியை பார்த்து நான் கேட்கிறேன், இந்தி கத்துக்ககூடாதுன்னு நீங்க சொல்லுறீங்க. உங்க வீட்டில் உள்ள குழந்தைகள் தமிழ் மொழி தான் கற்றுக்கொள்கிறார்கள்? 

kushboo

உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்த்துள்ளீர்களா.? புதிய கல்விகொள்கையில தாய்மொழி தாண்டி வேற மொழியில் படிக்க ஆப்ஷன் தான் கொடுக்கப்பட்டுள்ளது. நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள் தான். ஆனால் நான் நெற்றியில் பொட்டு வைப்பதில் பெருமைபடுறேன். என் பேருக்கு பின்னால கணவர் பெயர் போடுறதுல எனக்கு பெருமை. எங்களுக்கு மதம் பெருசு கிடையாது, ஆனா ஒரு மதத்துக்கு எதிரா நீங்க செய்யுறதுதான் தவறு. 

திருமாவளவன் இந்து மதத்திற்கு எதிராக பேசுகிறார். நான் இந்த மேடையில் திருமாவளவனுக்கு ஒரு சவால் விடுறேன். இந்து மதத்திற்கு எதிராக இவ்வளவு பேசுறீங்களே, உங்களுக்கு தைரியம் இருந்தால் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக ஒரு குரல் கொடுத்து பாருங்க. இந்து மதத்தினர் இழிச்சவாயங்கன்னு நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா.? என கடுமையாக சாடியுள்ளார்.