BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"நம்மள நிம்மதியா விடமாட்டாங்க.. " குடும்பத்தார் எதிர்ப்பு.!! கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.!!
மதுரையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 வயது மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மயிலம்மாள் என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்திருக்கிறார். மயிலம்மாள், மணிகண்டனை விட 10 வயது மூத்தவராக இருந்தாலும் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். மேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கின்றனர்.
-rxbxn.jpg)
இரு வீட்டிலும் எதிர்ப்பு
இவர்களது கள்ளக்காதல் விஷயம் இரு வீட்டருக்கும் தெரிய வரவே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் காதலை கைவிடுமாறு 2 பேரின் வீட்டிலும் எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் கள்ளக்காதல் ஜோடி கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறது.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் பயங்கரம்... எமானாக மாறிய சகலை.!! கள்ள காதல் படுகொலை!
ஜோடியாக தற்கொலை
இரு விட்டாரும் தங்களை பிரித்து விடுவார்கள் என்று அஞ்சிய கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவமறிந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.!! 3 சிறுவர்கள் கைது.!!