அரசியல் தமிழகம் இந்தியா

எச்.ராஜா எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா??

Summary:

H Raja in election


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே அரசியல் காட்சிகள் தங்களது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்ட துவங்கினர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோயமுத்தூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. வரும் தேர்தலில் எச்.ராஜாவிற்கு எந்த தொகுதி கொடுக்கப்படும் என இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. 

H raja pjp க்கான பட முடிவு

இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் நிற்கின்றார். அமமுக கட்சியில் தேர்போகி பாண்டி அவர்கள் போட்டியிடுகிறார். மேலும் சிவகங்கை தொகுதியில் பாஜகவிற்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement