முன்னாள் மத்திய அமைச்சர் கொரோனவால் மரணம்.! சோகத்தில் அரசியல் கட்சியினர்.!

முன்னாள் மத்திய அமைச்சர் கொரோனவால் மரணம்.! சோகத்தில் அரசியல் கட்சியினர்.!


former central minister died corona

ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் மேற்கு உத்தரப் பிரதேச முக்கியத் தலைவரான அஜித் சிங் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

ராஷ்டீரிய லோக் தள கட்சியின் தலைவராக இருந்த அஜித் சிங் முன்னாள் விமான போக்குவரத்து துறை மந்திரியாகவும், பாக்பத் தொகுதியில் 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை கொண்டவர் ஆவார்.  கடந்த 1986ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ajith sing

மேலும், முன்னாள் பிரதமர் விபி சிங், வாஜ்பாய், நரசிம்மராவ், மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சியில் மத்திய அமைச்சராக அஜித் சிங் பணியாற்றினார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.