"ஓபிஎஸ் அட்டைப்பூச்சி; அண்ணாமலை வேதாளம்.." முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சை பேட்டி.!!ex-minister-jeya-kumar-recent-interview-stir-criticism

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுகவில் மோதல்

பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் வைத்து அதிமுக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்களான இ.வி வேலு, தங்கமணி உள்ளிட்ட பலரும் சசிகலா ஓபிஎஸ் மற்றும் தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் எனக் கூறி மோதலில் ஈடுபட்டனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

politics

மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா

இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோன் 314-வது  பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாவீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: வருகிறார் ராஜமாதா... மீண்டும் களமிறங்கிய சசிகலா.!! கலக்கத்தில் இபிஎஸ் கோஷ்டி.!!

ஜெயக்குமார் அட்டாக்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள்   முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். அதிமுக கட்சித் தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சி போன்றவர் ஓபிஎஸ் எனக் குறிப்பிட்ட ஜெயக்குமார், 90% அதிமுக ஒருங்கிணைந்து விட்டதாக சசிகலா கூறுவது அப்பட்டமான பொய் என தெரிவித்தார். மேலும் அண்ணாமலை என்ற வேதாளம் தங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வப் பெருந்தகை மீது ஏறி இருப்பதாகவும் தெரிவித்தார். இவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: பரபரப்பு... அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்.!! இபிஎஸ்-க்கு எதிராக திரும்பும் முன்னாள் அமைச்சர்கள்.!!