ஓ.பி.எஸ் வந்தால் இணைத்துக் கொள்வோம்: ஈ.பி.எஸ் கூடாரத்தில் எழுந்த கலக குரல்!. கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!

ஓ.பி.எஸ் வந்தால் இணைத்துக் கொள்வோம்: ஈ.பி.எஸ் கூடாரத்தில் எழுந்த கலக குரல்!. கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!


Edappadi Palaniswami as a single leader, we will join O. Panneerselvam in ADMK.

ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்வோம் என்று கடம்பூர் ராஜு கூறியுள்ளார். 

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தீர்ப்பை பார்த்து ஆச்சரியப்படுவது ஒன்றுமில்லை, இது நியாயத்தின் தீர்ப்பு. நீதிமன்றமாக இருந்தாலும் சரி தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் மெஜாரிட்டியாக யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெறமுடியும். ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்ற முடிவை ஏற்றுக்கொண்டு வந்தால் ஓ.பி.எஸ்-ஐ இணைத்துக் கொள்ள தயார்.

அ.தி.மு.க தலைமை எங்கே இருக்கிறதோ அங்க தான் அ.தி.மு.க-வும் இருக்கும் அதன் தொண்டர்களும் இருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்தால் இணைத்து கொள்வோம். தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆவார். அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. நாங்கள் யாரையும் பார்த்து பயப்படவில்லை 98 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளார்கள் 2 சதவீதம் உள்ளவர்களை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

தமிழகத்தில் பெரிய இயக்கமாக அ.தி.மு.க உள்ளது எத்தனையோ பிளவுகளை அ.தி.மு.க-வினர் பார்த்துள்ளோம், இது ஒன்றும் புதிதல்ல. பொறுப்பில் உள்ளவர்கள் நிர்வாகிகள் அணி மாறலாம். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அ.தி.மு.க-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான். தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.