
dmk leader stalin - today birthday
இன்று தனது 67வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் தொண்டர்கள் ஒலிபெருக்கியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று மார்ச் 1 வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது 67வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். திமுக தலைவராக பொறுப்பு ஏற்று அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது பிறந்தநாள் பரிசாக 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து தாருங்கள் என்று தொண்டர்களுக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இயற்கையின் சதியால், கருணாநிதி இல்லை. அவரிடம் வாழ்த்து பெறுகிற வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது. அதனால் தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு, வேண்டுகோள் விடுத்தேன். நேரில் வந்து, வாழ்த்துவதை தவிர்த்திடுங்கள்.
பேனர்கள் வைக்காதீர்கள்; ஆடம்பர விழாக்கள் அவசியமில்லை. மாணவர்களின், பொதுத் தேர்வு நேரம் என்பதால், ஒலிபெருக்கிகள் கட்டக் கூடாது. 'எரிவதை இழுத்தால், கொதிப்பது அடங்கும்' என்பர். அதுபோல, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் தயவில், காலம் தள்ளுகிற, மாநில ஆட்சியாளர்களும், அவர்களாகவே வீட்டுக்குக் கிளம்பி விடுவர்.
நாற்பது தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளை பறித்து தாருங்கள். அதுவே, எனக்கு தருகிற ஒப்பற்ற, விலைமதிப்பில்லா பிறந்த நாள் பரிசு. இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement