" ஆடி வருவதற்குள் உன் பாடி வந்துடும் போல " திமுகவை மறைமுகமாக தாக்கிய டாக்டர் எழிலனின் எக்ஸ் பதிவு! சர்ச்சையை கிளப்பிய வீடியோ...!!!



dmk-ezhilan-course-correction-video-political-debate

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுகவில் உள்கட்சி விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. தவெக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக பல முக்கிய தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்தது. குறிப்பாக, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலேயே தோல்வியடைந்தது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோல்விக்கான காரணங்களை ஆராய 35 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்து, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பணிகளில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ள சூழலில், முன்னாள் திமுக எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் வெளியிட்டுள்ள வீடியோ அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சியில் விஜய்! தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கட்சி.....அதிகாரபூர்வ அறிவிப்பால் அரசியல் வட்டாரதில் பரபரப்பு!!!

‘Course Correction’ வீடியோவால் கிளம்பிய சர்ச்சை

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான டாக்டர் எழிலன், தனது எக்ஸ் பக்கத்தில் ‘Course Correction – Step 1’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் சந்தானம் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில்,  நடிகர் சந்தானம் ஒருவரிடம் வயது கேட்க, அதற்கு அவர் 'ஆடி வந்தால் 67' என்கிறார். உடனே சந்தானம், 'ஆடி வருவதற்குள் உன் பாடி வந்துவிடும் போல.. நீ இன்னும் இந்த சீட்டில் இருந்து தேய்த்துக் கொண்டிருக்கிறாய்.  வயது குறித்து பேசும் காட்சியின் இறுதியில் “60 வயதுக்கு மேற்பட்ட யாரும் இருக்கக் கூடாது” என்ற வசனம் இடம்பெறுகிறது. இதை பலரும் திமுகவின் மூத்த நிர்வாகிகளை குறிவைத்து பதிவிட்ட மறைமுக அரசியல் கருத்தாகவே பார்க்க தொடங்கியுள்ளனர்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டுமா?

திமுகவின் தேர்தல் தோல்விக்கு மூத்த தலைவர்களின் ஆதிக்கமும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படாததுமே முக்கிய காரணம் என கட்சிக்குள் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த சூழலில்தான் டாக்டர் எழிலன் வெளியிட்ட இந்த பதிவு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

கட்சியில் தலைமுறை மாற்றம் அவசியம் என்றும், இளம் நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் எழிலன் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றியிலிருந்து தோல்விவரை

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை எதிர்த்து போட்டியிட்ட எழிலன், 31 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தவெக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகரனிடம் 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் உருவாகியுள்ள மாற்றத் தேவையை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த வீடியோ பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் கட்சியை மறுசீரமைக்க முயற்சி செய்து வரும் நேரத்தில் எழிலனின் பதிவு கட்சிக்குள் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

 

இதையும் படிங்க: ரஜினிகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு! அதிமுக - திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை.... உண்மையை உடைத்த ரியாஸ்.!!!