திமுக எம்.பி ராசாவின் இழிவான பேச்சை கண்டித்து; 26-ஆம் தேதி பாஜக அறவழியில் போராட்டம்... அண்ணாமலை..!!

திமுக எம்.பி ராசாவின் இழிவான பேச்சை கண்டித்து; 26-ஆம் தேதி பாஜக அறவழியில் போராட்டம்... அண்ணாமலை..!!


DMK condemns MP Raza's derogatory speech; Protest on 26th BJP charity... Annamalai..!!

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் தி.மு.க. எம்.பி. ராஜாவை திறனற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் ராஜாவை கண்டித்ததற்காக கோவை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல்துறை கைது செய்துள்ளது. 

இதை தமிழக பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மத கலவரத்தைத் தூண்டும் வகையில் இந்துக்களை இழிவாக பேசி வரும் ராஜாவை கைது செய்யாமல், இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய, அவரது இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்?.

திராவிட முன்னேற்றக் கழக அரசின் அடக்குமுறைகளுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள். ஆ.ராசாவின் இழிவான செயலுக்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை நடத்துவோம். மாபெரும் அறவழி போராட்டத்தை வருகிற 26-ஆம் தேதி நடத்துவோம். ஆளுங்கட்சியின் அவலத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.