#JustIN: திமுகவில் இணைய காரணம் என்ன? - சத்யராஜ் மகள் சொன்ன அந்த முக்கிய விஷயங்கள்.. அசத்திடீங்க போங்க.!



  Divya Sathyaraj on DMK Joining 19 Jan 2025 

தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பல தொண்டு பணிகளை செய்து வந்த திவ்யா, தற்போது மக்கள் பணியில் நேரடியாக தன்னை அரசியலில் இணைத்து களமிறங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நான் ஊட்டச்சத்து நிபுணர். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும், அதற்கு உதாரணம் முக ஸ்டாலினின் காலை உணவுத்திட்டம். திமுக பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி. அதற்கு உதாரணம் புதுமைப்பெண் திட்டம். எல்லா மதத்திற்கும் மரியாதை தரும் கட்சி திமுக தான். 

dmk

ரோல் மாடல் முதல்வர் ஸ்டாலின் தான்

கனிமொழி, தமிழச்சி, மேயர் பிரியா, மம்தா பானர்ஜி, ஜோதிமணி உட்பட பல நிர்வாகிகளைப்போல நானும் முன்னேறுவேன். எனக்கு பல கட்சியிலும் இருந்து அழைப்பு வந்தது. சிலர் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். நான் திமுகவில் இணைந்தது முதல்வருக்கு மகிழ்ச்சி தான். எனது கடின உழைப்பை அவர் கவனித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனி - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!

முக ஸ்டாலின் தான் எனக்கு முன்னுதாரணம். அவரின் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது. அரசியலுக்கு வந்ததற்கு அதுதான் காரணம். மக்கள் பணிகளை செய்யும் யாராக இருந்தாலும் அரசியல் வாருங்கள். இதுவரை மக்கள் பணி செய்து விஜயை நான் பார்க்கவில்லை. 2026 தேர்தலுக்கு பின்னும் திமுக ஆட்சி தான்" என பேசினார்.

இதையும் படிங்க: #Breaking: எவ்வுளவு நாள் தான் ஏமாத்துவீங்க? திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்.!