அரசியல் இந்தியா விளையாட்டு

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் மீது திடீர் வழக்கு! என்ன காரணம் தெரியுமா?

Summary:

complaint file on gowtham kampir

டெல்லியிலுள்ள 7 தொகுதிகளுக்கு மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 22ஆம் தேதி பா.ஜ.க-வில் இணைந்த கவுதம் காம்பீருக்கு உடனடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கவுதம் காம்பீர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து, கடந்த 25ஆம் தேதி டெல்லியின் ஜங்க்புரா பகுதியில் கவுதம் காம்பீர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால், அவர் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

complaint on gautam gambhir க்கான பட முடிவு

இந்த புகாரின் அடிப்படையில் காம்பீர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனுமதியின்றி பிரச்சார கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் காம்பீருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement