BREAKING: இதுவே முதல்முறை.... எந்த முதல்வரும் செய்யாததை செய்த விஜய்! சொந்த பணத்தை வழங்குகிறார்....! கசிந்த ரகசிய தகவல்..!!!
தமிழக முதல்வர் விஜய்யின் சமீபத்திய டெல்லி அரசுமுறைப் பயணம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அந்த பயணத்திற்காக பயன்படுத்தப்பட்ட தனி விமானச் செலவை அவர் சொந்த நிதியில் ஏற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சமூக வலைதளங்களில் எழுந்திருந்த விமர்சனங்களுக்கு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தனி விமானப் பயணத்தைச் சுற்றிய சர்ச்சை
அண்மையில் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய், தனி விமானத்தை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. குறிப்பாக மக்களின் வரிப்பணம் தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: தந்தை முதல்வர் பதவியேற்ற நாளில் மகன் சஞ்சய் போட்ட அந்த ஒரு பதிவு.....! அதைக்கண்டு அதிர்ச்சியில் விஜய்..!!!!!
இந்த சூழலில், முதல்வர் விஜய் தனது பயணத்திற்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து ஏற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சொந்த நிதியில் செலவு ஏற்க முடிவு
தகவலின்படி, டெல்லி பயணத்திற்காக ஏற்பட்ட மொத்த விமானச் செலவையும் தனிப்பட்ட நிதியில் இருந்து கழித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் விவாதம்
டெல்லிக்குச் சென்று வர தனி விமானத்திற்கு சுமார் ₹50 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்படும் நிலையில், தனி விமானச் செலவு முழுவதையும் சொந்த நிதியில் ஏற்கும் முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல்வரின் இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் இது வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மறுபுறம் அரசியல் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.