#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
EPS vs ops; தலைமை பதவியை அடுத்து தலைமை அலுவலகத்திற்காக மோதல்: நீதிமன்றத்தில் காரசார விவாதம்..!
EPS vs ops; தலைமை பதவியை அடுத்து தலைமை அலுவலகத்திற்காக மோதல்: நீதிமன்றத்தில் காரசார விவாதம்..!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.இதற்கிடையில், அ.தி.மு.க தலைமை அலுவலகம் அருகே ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பி.எஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக ஈ.பி.எஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் காரணமாக இருதரப்பினரிடையே மோதலை தவிர்க்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில், சீல் வைத்ததை எதிர்த்து ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல செய்தனர். இன்று இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச் சென்றதாக ஈ.பி.எஸ் வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கோர எந்த உரிமையும் இல்லை. அ.தி.மு.க அலுவலகம் தனி நபர் சொத்து அல்ல என ஈ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் சென்றதாகவும் அங்கே ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் தடுத்ததாகவும் ஓ.பி.எஸ் வழக்கறிஞர் வாதிட்டார். கட்சி அலுவலகத்தில் நுழைய நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை எனவும் அவர் வாதத்தை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.