புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
குஷ்பு ஆவலுடன் எதிர்பார்த்த தொகுதி..! தட்டி தூக்கிய பாமக.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய காட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு, கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகி, அதன் கூட்டணி கட்சியான காங்கிரசில் 2014-ல் இணைந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் நடிகை குஷ்பு.
இந்தநிலையில், பாஜகவில் இணைந்த குஷ்புவிற்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு தீவிரமாக செயல்பட்டார். இதனால் குஷ்பு அந்த தொகுதியில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜகவுக்கான தொகுதிகளை நேற்று அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் குஷ்பு ஆவலோடு காத்திருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.