திமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு.. தேர்தல் நாள் சம்பவத்தால் சிக்கலில் சேகர் பாபு.!



Case Filed Against Former DMK Minister Sekar Babu Over Alleged Poll Day Assault in Chennai

துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. & ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார்:

2026 சட்டப்பேரவை தேர்தலின்போது, சென்னை துறைமுகம் தொகுதியின் திமுக வேட்பாளராக சேகர் பாபுவும், தவெக வேட்பாளராக சினோராவும் களமிறங்கி இருந்தனர். வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று, தவெக வேட்பாளர் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் மண்ணடி பகுதியில் இருவரும் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சேகர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் சினோரா மற்றும் பிறரை தாக்கி இருந்ததாக புகார் எழுந்தது. 

இதையும் படிங்க: Salem News: திமுக பிரமுகரின் அதிர்ச்சி செயல்.. லீக்கான வீடியோ.! 

TN politics

விசாரணை:

தாக்குதல் சம்பவத்தின்போது, துணை ராணுவப்படையினர் வந்து இருதரப்பையும் விலக்கிச் சென்றனர். பின் தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். வாக்குசாவடியை திமுகவினர் ஆக்கிரமிக்க முயன்றதாகவும், இதனை தடுக்க முயன்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விஷயம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

முன்னதாகவே இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, அவரின் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதல், ஆபாசமாக திட்டுதல் என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!