இது முடிவல்ல... ஒரு நல்ல தொடக்கம்! MLA பதவியை ராஜினாமா செய்த பிறகு சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட ஆடியோ.... அப்போ தவெக-தான்! ஆட்டம் காணும் அரசியல் களம்..!!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சபாநாயகரை நேரில் சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிலையில், அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் தமிழக அரசியலில் புதிய விவாதங்கள் கிளம்பியுள்ளன.
அதிமுகவில் தொடரும் பதவி விலகல்கள்
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், சி.விஜயபாஸ்கரின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தனர்.
இந்த நிலையில், ஐந்தாவது எம்எல்ஏவாக சி.விஜயபாஸ்கரும் பதவி விலகியுள்ளார். தேர்தலுக்குப் பிறகு 47 உறுப்பினர்களுடன் இருந்த அதிமுகவின் பலம் தற்போது 42 ஆக குறைந்துள்ளது.
சபாநாயகரை சந்தித்து ராஜினாமா
சென்னையில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தகவலின்படி, கடிதம் வழங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அது முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது அடுத்த அரசியல் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து நிலவி வருகிறது.
வாய்ஸ் மெசேஜால் அதிகரித்த பரபரப்பு
ராஜினாமாவுக்கு பிறகு வெளியிட்ட ஆடியோ செய்தியில், விராலிமலை தொகுதி மக்களுக்கு சி.விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார். மேலும், “இது மக்கள் எடுத்த முடிவு. இது முடிவல்ல, ஒரு நல்ல தொடக்கம்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோ வெளியாகியதையடுத்து அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து சமூக வலைதளங்களிலும் அரசியல் அரங்குகளிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக அரசியலில் புதிய மாற்றங்களுக்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! MLA பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்..! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வால் பரபரப்பு..!!!