புஷ்வானம், ஹைப், பிளாப்.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு.! 



White Paper or Empty Report? Thangam Thennarasu Slams Tamil Nadu Government’s Financial White Paper

முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக தலைமையிலான தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையை வெற்று அறிக்கை என விமர்சனம் செய்துள்ளார். 

TVK VS DMK: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், "வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. 

ஹைப் - பிளாப்:

ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும்  “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.

இதையும் படிங்க: அமமுக எம்எல்ஏ மாயமா? தவெகவுக்கு ஆதரவா? ஒரேயடியாக போட்டுத்தாக்கிய டிடிவி தினகரன்.!

TN politics

இயலாமையை மறைக்க அறிக்கை?

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 
 

 

 

இதையும் படிங்க: Madurai News: அலங்காநல்லூரில் அட்டூழியம் காட்டிய தெருநாய்கள்.. 15 பேர் அலறி மருத்துவமனைக்கு ஓட்டம்.. செவிலியர்கள் சொன்ன ஷாக் தகவல்.!