தூள் கிளப்பும் CM விஜய்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரனின் தவெக - வில் இணைவு!!!
தமிழக அரசியலில் முக்கிய கவனம் ஈர்க்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் அதிகாரப்பூர்வமாக உறுப்பினராக சேர்ந்தார்.
பனையூரில் நடைபெற்ற இணைப்பு நிகழ்வு
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி. மகேந்திரன் உறுப்பினர் படிவத்தைப் பெற்று கட்சியில் இணைந்தார். பல ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இடதுசாரி அரசியலில் நீண்ட அனுபவம்
சி. மகேந்திரன் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர், அரசியல் விமர்சகர் மற்றும் பேச்சாளராக அறியப்படுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், நீண்ட காலமாக இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வந்தவர்.
தவெக வியூகத்திற்கு கூடுதல் பலம்?
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த சூழலில் அனுபவமிக்க தலைவர்களின் வருகை, கட்சியின் கொள்கை விவாதங்கள் மற்றும் தேர்தல் வியூகங்களுக்கு உதவக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, சி. மகேந்திரன் போன்ற நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட தலைவர் புதிய அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பது, தமிழக அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அதிருப்தியிலேயே அதிமுக அல்லேலப்படுது.... தவெக விற்கு தாவிய கந்தர்வகோட்டை முன்னால் எம்.எல். ஏ...! அதிர்ச்சியில் எடப்பாடி..!!!