மீண்டும் மோடி.! இந்த முறையும் பாஜக ஆட்சி.? திமுகக்கு எத்தனை இடங்கள்.? வெளியான கருத்துக்கணிப்பு.!

மீண்டும் மோடி.! இந்த முறையும் பாஜக ஆட்சி.? திமுகக்கு எத்தனை இடங்கள்.? வெளியான கருத்துக்கணிப்பு.!



bjp-will-comes-to-power-again-opinion-poll-results-by-t

2024 ஆம் வருட பொதுத்தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்து வருகிறது. 2014 ஆம் வருடம் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த பாஜக 2019 ஆம் வருட தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று  மோடி இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றார்.

2024 ஆம் வருட பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களுக்கு மேல் தனியாக வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் அவர்களது தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. தற்போது டைம்ஸ் நவ் நாளிதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று வெளியாகி இருக்கிறது.

Opinion Pollஇவர்களது கருத்துக் கணிப்பின்படி வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக 333 முதல் 363 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 28 முதல் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பெறும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. மூன்றாவது இடத்திற்கான போட்டி திமுக மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக 24 முதல் 28 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 முதல் 24 இடங்களில் வெற்றி பெறும் எனவும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறது.

Opinion Pollஇவற்றைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 17 முதல் 21 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆம் ஆத்மி கட்சி  5 முதல் 7 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இவை தவிர பிஜு ஜனதா தளம் கட்சி 10-லிருந்து 11 தொகுதிகள் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. சுயேச்சைகள்  மற்றும் பிற கட்சிகள் 64 முதல் 84 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் மூலம் நரேந்திர மோடி 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றியுடன் பிரதமராக வர இருக்கிறார் எனவும் அந்த முடிவுகள் தெரிவிக்கிறது.