அரசியல் தமிழகம்

அமமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு தற்போதைய நிலை.! தேமுதிக-விற்கு எத்தனை தொகுதி கொடுக்க வாய்ப்பு.!

Summary:

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்ப

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அமமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இவ்வாறான நிலையில், அமமுக-வின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

195 தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், தேமுதிக தனித்து தான் 2021 சட்டமன்ற தேர்தல் சந்திக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம், அமமுக கூட்டணியில் இன்னும் 19 தொகுதிகள் மீதம் உள்ள நிலையில், தேமுதிக உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் இன்று நல்ல முடிவு கிடைக்கும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Advertisement