யாருடன் யார் மோதல்; வெற்றி வாய்ப்பு யாருக்கு? - தொகுதிகள் புள்ளிவிவரம்!

யாருடன் யார் மோதல்; வெற்றி வாய்ப்பு யாருக்கு? - தொகுதிகள் புள்ளிவிவரம்!


allaince-full-details-in-tamil-nadu

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் மெகா கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாததால் மாநில கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தலைமையில் மெகா கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த மெகா கூட்டணியில் அதிமுக அணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் பாண்டிச்சேரியில் NR காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற பட்டியில் இன்று வெளியாகியுள்ளது. 

அதேபோல், திமுக கூட்டணியில் தேசிய காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கவைகளுக்கான தொகுதிகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி இறுதி செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எந்நதெந்த கட்சிகள் நேரிடையாக போட்டியிடுகின்றன என்ற தகவலை இங்கு காணலாம். மேலும் இதன் மூலம் எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதையும் மக்கள் கணிக்க முடியும். 

தொகுதிகள் விவரம்:
1. தென் சென்னை             - திமுக vs அதிமுக
2. வட சென்னை                  - திமுக vs தேமுதிமுக
3. மத்திய சென்னை          - திமுக vs அதிமுக
4. காஞ்சிபுரம்                       - திமுக vs பாமக
5. திருப்பெரும்புதூர்         - திமுக vs பாமக
6. அரக்கோணம்                  - திமுக vs பாமக
7. வேலூர்                               - திமுக vs புதிய நீதிக்கட்சி 
8. தர்மபுரி                               - திமுக vs பாமக
9. திருவண்ணாமலை      - திமுக vs அதிமுக
10. கள்ளக்குறிச்சி              - திமுக vs தேமுதிமுக
11. கடலூர்                              - திமுக vs பாமக
12. சேலம்                                - திமுக vs அதிமுக
13. தஞ்சாவூர்                        - திமுக vs தமாக
14. திருநெல்வேலி             - திமுக vs அதிமுக
15. பொள்ளாச்சி                  - திமுக vs அதிமுக
16. நீலகிரி                              - திமுக vs அதிமுக
17. தூத்துக்குடி                     - திமுக vs பாஜக
18. திண்டுக்கல்                   - திமுக vs பாமக
19. தென்காசி                       - திமுக vs புதிய தமிழகம் கட்சி 
20. மயிலாடுதுறை            - திமுக vs அதிமுக
21. திருவள்ளூர்                  - காங்கிரஸ் vs அதிமுக
22. கிருஷ்ணகிரி               - காங்கிரஸ் vs அதிமுக
23. ஆரணி                            - காங்கிரஸ் vs அதிமுக
24. கரூர்                                 - காங்கிரஸ் vs அதிமுக
25. திருச்சி                            - காங்கிரஸ் vs தேமுதிமுக
26. சிவகங்கை                    - காங்கிரஸ் vs பாஜக
27. விருதுநகர்                     - காங்கிரஸ் vs தேமுதிமுக
28. கன்னியாகுமரி           - காங்கிரஸ் vs பாஜக
29. தேனி                                - காங்கிரஸ் vs அதிமுக
30. புதுச்சேரி                        - காங்கிரஸ் vs NR காங்கிரஸ் 
31. ஈரோடு                             - மதிமுக vs அதிமுக
32. சிதம்பரம்                       - விசிக vs அதிமுக
33. விழுப்புரம்                     - விசிக vs பாமக
34. மதுரை                            - மா.கம்யூனிஸ்ட் vs அதிமுக
35. கோவை                          - மா.கம்யூனிஸ்ட் vs பாஜக
36. நாகப்பட்டினம்              - இ.கம்யூனிஸ்ட் vs அதிமுக
37. திருப்பூர்                         - இ.கம்யூனிஸ்ட் vs அதிமுக
38. ராமநாதபுரம்                - இ.யூ.முஸ்லீம் லீக் vs பாஜக
39. நாமக்கல்                       - கொ.ம.தேசிய கட்சி vs அதிமுக
40. பெரம்பலூர்                  - ஐஜேகே vs அதிமுக

நேரடியாக மோதும் தொகுதிகள் எண்ணிக்கை:
திமுக vs அதிமுக      - 8
திமுக vs பாமக           - 6
திமுக vs தேமுதிக     - 2
திமுக vs பாஜக          - 1
திமுக vs தமாக           - 1
திமுக vs புதக              - 1
திமுக vs புநீக -        1

காங்கிரஸ் vs அதிமுக - 5
காங்கிரஸ் vs தேமுதிக - 2
காங்கிரஸ் vs பாஜக - 2
காங்கிரஸ் vs NR காங்கிரஸ் - 1

மதிமுக vs அதிமுக - 1
விசிக vs அதிமுக - 1
விசிக vs பாமக - 1

மா.கம்யூனிஸ்ட் vs அதிமுக - 1
மா.கம்யூனிஸ்ட் vs பாஜக - 1
இ.கம்யூனிஸ்ட் vs அதிமுக - 2
கொ.ம.தேசிய கட்சி vs அதிமுக - 1
இ.யூ.முஸ்லீம் லீக் vs பாஜக - 1
ஐஜேகே vs அதிமுக - 1