ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!
கமல், ரஜினி, விஜய் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா! அஜித் வரக்கூடாதா? முக்கிய அரசியல் பிரபலத்தின் அதிரடி பேச்சு.

கமல், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் முன்னணி நடிகர்களாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனி தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினி, கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டனர்.
மேலும் இவர்கள் இருவரும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். அதுமட்டுமின்றி அண்மையில் நடைப்பெற்ற கமல்60 விழாவில் விஜயின் தந்தை விஜய் அரசியலுக்கு வருவார் என சூசகமாக பேசியுள்ளார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி அவர்கள் எடப்பாடி முதலமைச்சர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. அதுப்போல நாளையும் அதிசயம் நடக்கும் என கூறினார்.
இதனை பற்றி தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். ஆனால் கமல், ரஜினி, விஜய் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா, அஜித் வரக்கூடாதா? என கேள்வி எழுப்பிய ராஜேந்திர பாலாஜி.
அதன் பிறகு அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் அதிரடியான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.