அதிமுகவுக்கு பலத்த அடி! மிக முக்கிய புள்ளியை தன்பக்கம் இழுத்து கைவசப்படுத்திய CM விஜய்! கோட்டையில் திணறிப்போய் நிற்கும் எடப்பாடி...!!!
அதிமுகவின் முக்கிய தொழிற்சங்க முகமாக அறியப்பட்ட ஆர். கமலக்கண்ணன், தனது ஆதரவாளர்களுடன் திடீரென த.வெ.க கட்சியில் இணைந்துள்ளார். இந்த மாற்றம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக தொழிற்சங்க அமைப்புகளில் கமலக்கண்ணனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக, இந்த அரசியல் நகர்வு கவனம் பெற்றுள்ளது.
17 துறைகளில் செல்வாக்கு கொண்ட அமைப்பு
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை போக்குவரத்து, டாஸ்மாக், மின்துறை உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் சுமார் 5.42 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமைப்பின் மாநிலச் செயலாளராக இருந்த ஆர். கமலக்கண்ணன், பல ஆண்டுகளாக தொழிற்சங்க நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்து வந்தார். தொழிலாளர் வட்டாரங்களில் தனிப்பட்ட ஆதரவை உருவாக்கியிருந்ததால், அவரது கட்சி மாற்றம் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவுக்கு அதிர்ச்சி?
தகவலின்படி, கமலக்கண்ணனுடன் ஏராளமான ஆதரவாளர்களும் த.வெ.க-வில் இணைந்துள்ளனர். இதனால், குறிப்பிட்ட தொழிற்சங்க பிரிவுகளில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், இந்த இணைப்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. வரவிருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் இந்த மாற்றம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.
இதையும் படிங்க: முடிந்தது சமரச பேச்சுவார்த்தை... விஜய் அரசுக்கு விழுந்த முதல் இடி! வேலுமணி செய்த தரமான சம்பவம்! தமிழக அரசியலில் அதிரடி ட்விஸ்ட்..!!!