அதிமுக பிளவுக்கு பின்னணியில் இருக்கும் அந்த ஒரு நபர்.! அன்று ஓபிஎஸ்.....இன்று ஈபிஎஸ்..! காயை கச்சிதமாக நகர்த்தி நடக்கும் வேலை.... அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்..!!!



aiadmk-eps-sp-velumani-cv-shanmugam-power-struggle

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், தற்போது சட்டமன்றத்திலேயே அதிமுக பிளவு வெளிப்படையாகக் காணப்பட்டது.

கட்சிக்குள் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அணியும், மற்றொரு பக்கம் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையிலான அணியும் தனித்தனியாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தவெக ஆதரவு நிலைப்பாடு மற்றும் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சி குறித்து பல்வேறு தகவல்கள் பரவியபோதும், அதிமுக நிர்வாகிகள் அதை தொடர்ந்து மறுத்து வந்தனர்.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!

சட்டமன்றத்தில் வெளிப்பட்ட பிளவு

17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவுகளாகச் சட்டமன்றத்துக்கு வந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக ஆதரித்து ஓஎஸ் மணியன் உள்ளிட்ட 23 எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவுக் கடிதம் வழங்கினர்.

அதே நேரத்தில், சிவி சண்முகம் தலைமையில் வந்த 24 எம்எல்ஏக்கள், எஸ்பி வேலுமணியை சட்டமன்றக் குழுத் தலைவராகவும், சி. விஜயபாஸ்கரை கொறடாவாகவும் ஆதரித்து தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால் அதிமுக பிளவு தற்போது வெளிப்படையான அரசியல் விவகாரமாக மாறியுள்ளது.

‘கட்சியில் குழப்பம் இல்லை’ - தனபால்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் பதிலளிக்காமல் சென்றார். ஆனால் மாநிலங்களவை எம்பி தனபால், அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமிதான் தொடர்ந்து பொதுச்செயலாளராக உள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஈபிஎஸ் முகத்திற்காகவே ஒன்றரை கோடி வாக்குகள் அதிமுகவிற்கு கிடைத்ததாக தொண்டர்கள் தரப்பிலும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.

சிவி சண்முகம் மீண்டும் முக்கிய பங்கு?

2022-ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோது முக்கிய பங்காற்றிய சிவி சண்முகம், தற்போதைய எஸ்பி வேலுமணி அணி உருவாக்கத்திலும் முக்கிய பின்னணியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இனி எஸ்பி வேலுமணி அணியின் அடுத்தகட்ட நகர்வு என்ன, எடப்பாடி பழனிசாமி மீண்டும் கட்சியை ஒருங்கிணைக்க முடிவாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நிலவுகிறது. வரும் நாட்களில் அதிமுக எடுக்கும் முடிவுகளே கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: அழியப்போகும் அதிமுக கட்சி...? எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்! சிவி சண்முகம் செய்யும் தில்லாங்கடி வேலையால்.... தலையை ஆட்டும் அமைச்சர்கள்!