அதிமுகவில் அடுத்தக்கட்ட பரபரப்பு... சி.வி.சண்முகத்தின் ரகசிய 1000 கையெழுத்து பிளான்! அடுத்ததாக எடப்பாடியின் " பிளான் B" மூவ்..!!!



aiadmk-cv-shanmugam-secret-signature-general-council

அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் வேகமெடுத்து வரும் நிலையில், கட்சிக்குள் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, சி.வி.சண்முகம் தரப்பு சுமார் 1000 பொதுக்குழு உறுப்பினர்களிடம் ரகசியமாக கையெழுத்து சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகளை தங்கள் அணிக்குள் கொண்டு வருவதற்கான பின்னணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: BREAKING : இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.! இப்போ ஓகே சொல்லனா அடுத்த கட்டமாக அதிரடி முடிவு தான்... ஒரு முடிவோடு கிளம்பிய விஜய்!!!

பொதுக்குழுவை மையமாகக் கொண்ட நகர்வு

தகவலின்படி, கட்சியின் அடுத்த அரசியல் திசையை நிர்ணயிக்கும் வகையில் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற நோக்கில் சி.வி.எஸ் தரப்பு செயல்பட்டு வருகிறது. அதற்கான ஆதரவை உறுதி செய்யும் முயற்சியாக, மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களை அணுகி கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சில முக்கிய நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுகவில் உள்ளக அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இ.பி.எஸ் தரப்பின் ‘பிளான் B’

மற்றொரு புறம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் இடையேயான சந்திப்பு தொடர்ந்து தாமதமாகி வருவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இ.பி.எஸ் தரப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தேவைப்பட்டால் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகும் வகையில் மாற்றுத் திட்டமும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சிக்குள் அதிகாரப் போட்டி இன்னும் தீவிரமடையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

இரு தரப்பும் தனித்தனியாக அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு வரும் நிலையில், அதிமுகவில் மீண்டும் அதிகார சமநிலை குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. கட்சியின் எதிர்கால அரசியல் அமைப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிக ஆர்வம் நிலவுகிறது.

 

இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!