சற்றுமுன்... அதிமுகவில் இருந்து விலகி முக்கிய புள்ளி..! எடப்பாடிக்கு தேர்தல் நேரத்தில் விழுந்த பெரிய இடி..!!!!



admk-murugumaran-resigns-party

அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நாக. முருகுமாறன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையிலிருந்து தற்போதைய தலைமை விலகிச் செல்வதாகக் கூறி இந்த முடிவை எடுத்துள்ளதாக முருகுமாறன் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்சியிலிருந்து விலகியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு முருகுமாறன் கடிதம்

அதிமுக அமைப்புச் செயலாளராக செயல்பட்டு வந்த முருகுமாறன், தனது விலகல் முடிவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய கொள்கை மற்றும் பாதையிலிருந்து தற்போதைய கட்சித் தலைமை தடம் மாறிச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையுடனும் வலியுடனும் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இதுதான் சரியான டைம்...! இடைத்தேர்தலில் வேலுமணி, CV சண்முகம் போட்ட பிளான்... அரசியலில் பரபரப்பு..!!!

இருமுறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார். 2021 தேர்தலிலும் அதே தொகுதியில் களமிறங்கிய அவர், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திட்டக்குடி தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கினார்.

தேர்தல் களத்தில் இருந்த நிலையில் திடீர் விலகல்

2026 தேர்தல் வேட்பாளர் பட்டியலில் திட்டக்குடி தொகுதிக்கு முருகுமாறன் பெயரை அதிமுக தலைமை அறிவித்திருந்தது. தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்று வந்த நிலையில், தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் கடலூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் அவரது முடிவு குறித்து அரசியல் ரீதியான விவாதங்கள் எழுந்துள்ளன.

 

இதையும் படிங்க: எடப்பாடிக்கு சொந்த ஊரிலே வைத்த ஆப்பு...! தவெகவுக்கு மாறும் 1000 அதிமுக நிர்வாகிகள்.! செம்மலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு..!!!