சிவகார்த்திகேயன் - சீமான் புதிய கூட்டணி.. வெளியான அதிரடி அறிவிப்பு!
இடைத்தேர்தலில் திமுகவுக்கு செக் வைக்கும் எடப்பாடி! தலைகீழாக மாறப்போகும் தமிழக அரசியல் களம்....!!!
இடைத்தேர்தலில் அதிமுக தனது வேட்பாளரை முதன்முறையாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. திமுகவுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் போட்டி எந்த வடிவம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவுக்கு நேரடி போட்டியை உருவாக்கும் அதிமுக
தற்போதைய அரசியல் சூழலில் ‘திமுக VS தவெக’ என்ற நிலையை மாற்றி, மீண்டும் ‘திமுக VS அதிமுக’ என்ற நேரடி போட்டியை உருவாக்குவதே எடப்பாடி பழனிசாமியின் வியூகமாக பார்க்கப்படுகிறது. அதிமுக வேட்பாளர் அறிவிப்பு இதற்கான முதல் நகர்வாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: CM விஜய்யின் அடுத்த அதிரடி அரசியல் நகர்வு ! கூட்டணிக்கு செக் வைக்க திட்டம்.... அதிரும் அரசியல் களம்!!!
திமுக தேர்தலில் இருந்து விலகினால், போட்டி தவெக மற்றும் அதிமுக இடையிலானதாக மாறும். அதே நேரத்தில் திமுக களமிறங்கி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டால், அது அக்கட்சியின் அரசியல் செல்வாக்குக்கு பின்னடைவாக அமையும்.
கூட்டணி பலத்தை நம்பும் திமுக
இந்த சூழலில் திமுகவுக்கு இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன. ஒருபுறம் தவெகவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். மறுபுறம் அதிமுக உருவாக்க முயலும் நேரடி போட்டி வியூகத்தையும் முறியடிக்க வேண்டியுள்ளது.
இதனால் கூட்டணி பலம், வாக்கு வங்கி மற்றும் ஆட்சி அதிகாரத்தின் ஆதரவை பயன்படுத்தி நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெறுவதையே திமுக முக்கிய வாய்ப்பாக கருதும் நிலை உருவாகியுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்புக்கு அடுத்ததாக திமுக எடுக்கப்போகும் முடிவு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.