அரசியல் இந்தியா

சுயேட்சையாக களமிறங்கி, முதல்வர் மகனையையே பின்னுக்கு தள்ளிய பிரபல தமிழ்நடிகை.!

Summary:

actress sumalatha won kumarasamy son

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் இணைந்து கழுகு, முரட்டு காளை,குடும்பம் ஒரு கதம்பம்  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுமலதா. இவர் மறைந்த முன்னாள் மத்திய- மாநில அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவியாவார்.

நடிகை சுமலதா நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முயற்சி செய்தார் . ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி முடிவின்படி மண்டியா தொகுதியில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி  போட்டியிட நிறுத்தப்பட்டார்.

 

அதனை தொடர்ந்து சுமலதா மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார். இதனை தொடர்ந்து இருவரும் தீவிர பிரச்சாரம் கொண்டனர். மேலும் மண்டியா தொகுதியில் சுமலதாவிற்கு ஆதரவு பெருகியது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சுமலதா அம்பரீஷ் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமலதாவிற்கு பலதரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement