அரசியல் தமிழகம் சினிமா

பிரேக்கிங்: சற்று முன் அதிமுகவில் இணைந்தார் பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?

Summary:

Actor sarathkumar supports admk in election 2019

தமிழில் முன்னணி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான நடிகர் சரத்குமார் திடீரென இன்று அதிமுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், நாற்பது தொகுதிகளிலும் நாற்பது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் சரத்குமார் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் சரத்குமார் மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார் நடிகர் சரத்குமார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவை ஆதரிக்கும் எனவும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார் சரத்குமார்.

Image result for sarath kumar joins aiadmk

தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்தினாலையே இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.


Advertisement