இவர் தான் உண்மையான அரசியல்வாதி.செய்தி உள்ளே........



actor-kamal-political

நீண்ட காலமாக திரைத்துறையில் நிலைத்து நின்றவர்கள் நிற்பவர்கள் வெகு சிலரே, அந்த வகையில் இன்றும் சாதித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். பல்வேறு சாதனைகளை புரிந்து பத்மஸ்ரீ உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இது வரை ரசிகர்களை மகிழ்வித்து வந்த அவர் தற்போது மக்களுக்காக அரசியலில் கால்பதிக்க  வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தடையை சேர்ந்த கனிமொழி என்ற மருத்துவ  மாணவிக்கு தற்போது உதவியுள்ளார்.  மருத்துவ மாணவியான இவர் குடும்ப வறுமை காரணமாக கூலி வேலை செய்து படித்து வருகிறார். இவரது குடும்பத்தினரும் கூலி வேலை செய்து இவரை படிக்க வைக்கின்றனர்.

Latest tamil news

இந்நிலையில் இறுதியாண்டு படித்து வந்த இவர் குடும்ப வறுமையினால் பணம் செலுத்த முடியாமல் தன் படிப்பை விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்றார். இதனை ஓர் தனியார் பத்திரிக்கை தனது செய்தியில் இதனை குறிபிட்டிருந்தது.    

இதனை பார்த்த மக்கள் நீதி மைய்ய தலைவர் கமலஹாசன் தன்னுடைய சந்திரஹாசன் அறக்கட்டளை மூலமாக இவருக்கு உதவ முன்வந்துள்ளார். 

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கனிமொழியின் கல்வி கட்டணத்தையும், 
மாற்றுத்திறனாளியான அவரது சகோதரியின் செவிதிறன் குறைபாட்டிற்கான பொருட்செலவையும் தனது அறக்கட்டளை மூலமாக உதவுவதாக அறிவித்திருக்கிறார்.