உயிருக்கு உலைவைக்கும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு முறை - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

உயிருக்கு உலைவைக்கும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு முறை - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!


worst-cooking-methods-can-injurious-to-health

நாகரிகம் வளர வளர நாம் பழக்கவழக்கங்களும், உண்ணும் உணவு பொருட்களும் மாறிக்கொண்டே வருகிறது. நாம் எத்தகைய உணவுகளை உண்கிறோம் என்பது எவளவு முக்கியமோ அதே மாதிரி அந்த பொருட்கள் எவ்வாறு தாயாரிக்கப்படுகிறது என்பது அதை விட மிக முக்கியம்.

நாம் சமைக்கும் போது சில சத்துக்கள் நீரில் கரைந்துவிடும், இன்னும் சில சத்துக்கள் சூட்டில் கரைத்துவிடும். ஆகவே நாம் சமைக்கும் பொருளில் உள்ள முழுவதுமான சத்துக்கள் நம்மக்கு கிடைப்பதில்லை. நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகள் தவறான முறைகளில் சமைக்கப் படுபவை. அதில் சிலவற்றைப் பார்ப்போம். 

சமையல்

ஸ்மோக்கி

ஸ்மோக்கி சிக்கன், ஸ்மொக்கி டிராகன் எனப்படும் சில உணவுகள் புகையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் இதுபோன்ற உணவுகள்  நமது  உடலுக்கு முற்றிலும் கேடானது. புகையில் மூலம் வேகவைக்கப்படும்  மாமிசங்கள் கேன்சரை உண்டாக்கக் கூடியவை. புகையிலிருந்து வெளிபடும் 'பாலிசிலிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்' போன்ற கார்சினோஜென்கள் கேன்சரை உருவாக்கக்கூடியவை.

சமையல்

பார்பிக் யூ

பார்பிக் யூ சிக்கன் பிடிக்காத சிக்கன் பிரியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பலருக்கும் இதன் சுவை மிகவும் பிடிக்கும். ஆனால் இது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்க கூடியது என்று தெரியுமா? வெந்துக் கொண்டிருக்கும் சிக்கனில் இருந்து கொழுப்பு உருகி கீழே கொட்டும் போது 'பாலிசிலிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்'னை உள்ளடக்கிய கார்சினோஜெனிக் புகை உண்டாகிறது. அதோடு பார்பிக்யூ சாஸ்களில் சர்க்கரைகள் அதிகம் இருக்கின்றன. அதனால் அதி தீவிர பிரியர்கள் ஆசைக்கு என்றைக்காவது ஒருநாள் சாப்பிடுங்கள்.