உலக மகளிர்தினம் வரலாறு தெரியுமா உங்களுக்கு? இதோ!
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் மாறி இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணைத்து துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒருகாலத்தில் பெண்களை அடிமைகளாகவே நடத்தி வந்தது சமூதாயம்.
பெண்கள் என்றால் சமைப்பதற்கும், வீட்டு வேலைகள் பார்ப்பதற்கும் என்ற எண்ணம் மாறி இன்று நாடாளும் அளவிற்கு பெண்கள் உயர்ந்துவிட்டனர். இதனை கொண்டாடும் விதமாக ஒவொரு வருடமும் மார்ச் 8 ஆம் நாள் உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
முதல் மகளிர் தினம் எப்படி தோன்றியது?
1921 ம் ஆண்டில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின்’ மாநாடு மாஸ்கோவில் நடந்தது. மார்ச் 8 ல் புரட்சி செய்த ரஷ்யப் பெண் தொழிலாளர்களைப் போற்றும் வகையில் இனிமேல் மகளிர் தினத்தை நிரந்தரமாக மார்ச் 8 அன்று நடத்துவது என்று மாநாடு முடிவு செய்தது. அது முதல் மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.