கெட்ட கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த ஒரு கஞ்சி போதும்... பலன்கள் ஏராளம்...!

நாம் உணவுகளை வேகமாக சாப்பிடும் இந்த காலத்தில், உடல் எடை அதிகரித்துவிடுவது என்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. ஆனால், இயற்கை சத்துகள் நிறைந்த உணவுகளை நாம் உணவில் சேர்த்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதும், உடலின் உள்ளே தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதும் சாத்தியமாகும்.
அதற்கான ஒரு சிறந்த தீர்வாகும் கொள்ளு கஞ்சி. வாரத்தில் இரண்டு முறை இந்த கஞ்சி குடித்து வந்தால், உடம்பு மெல்ல மெல்ல சுறுசுறுப்பாக மாறி, தேவையில்லாத கொழுப்பு கரையும். இப்போது, இந்த சத்துகள் நிறைந்த கொள்ளு கஞ்சியை எளிமையாக எவ்வாறு செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1/4 கப்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
அவல் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 4 1/2 டம்ளர் + 1 டம்ளர்
தயிர் – 1 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை
1. வறுத்தல்:
முதல் கட்டமாக, ஒரு வாணலியில் கொள்ளுவை பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பிறகு வெந்தயத்தையும் சேர்த்து வறுக்கவும். வறுத்தவுடன் ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்கவும். அதே வாணலியில் அவலை வறுத்து அதை முடித்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: தினமும் காலை இட்லி, தோசை சாப்பிடுறீங்களா? இனிமே இதையும் சேர்த்துக்கோங்க.!! டாக்டர் சொல்லும் ஷாக்.!!
2. அரைத்தல்:
மிக்ஸியில் வறுத்த கொள்ளு, வெந்தயம் மற்றும் அவலை சேர்த்து கொரகொரவென்று அரைத்து பொடி செய்து வைக்கவும்.
3. கஞ்சி தயாரித்தல்:
ஒரு குக்கரில் 4½ டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் அந்த அரைத்த பொடியைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். குக்கரை மூடி 3–4 விசில் வரும்வரை வேகவைக்கவும். விசில் வந்ததும் குக்கரை திறந்து, கிளறி குளிர வைக்கவும்.
4. மோர் தயாரித்தல்:
ஒரு பாத்திரத்தில் தயிர், 1 டம்ளர் தண்ணீர், உப்பை சேர்த்து நன்கு அடித்து மோர் போன்று செய்ய வேண்டும். அதை கஞ்சியில் ஊற்றி நன்கு கலந்து, இறுதியாக வறுத்த சீரகப் பொடியை தூவி கிளறி விடவும்.
பலன்கள்:
இந்த கஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.
இது,
உடலை சீராக்கும்
கொழுப்பைக் கரைக்கும்
சத்தான உணவாக இருக்கிறது
வாரத்திற்கு இரண்டு முறை இந்த கொள்ளு கஞ்சியை குடித்து வந்தால், உங்கள் உடல் எடையில் நேர்மறையான மாற்றத்தைப் காணலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை இட்லி, தோசை சாப்பிடுறீங்களா? இனிமே இதையும் சேர்த்துக்கோங்க.!! டாக்டர் சொல்லும் ஷாக்.!!