தினமும் காலை இட்லி, தோசை சாப்பிடுறீங்களா? இனிமே இதையும் சேர்த்துக்கோங்க.!! டாக்டர் சொல்லும் ஷாக்.!!



no-to-idly-dosa-and-try-to-adapt-healthy-nutrition-food

ஒவ்வொரு நாளின் காலை வேளையிலும் பலரும் அன்றைய நாளின் உணவாக இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர். உடல் உழைப்பு காரணமாக வேலை செய்யும் நபர்கள் மாவுச்சத்து பொருளான இட்லி, தோசையை சாப்பிடலாம். 

எல்லாரும் ஒரே மாதிரி சாப்பிடக்கூடாது

ஆனால் உடல் உழைப்பு இல்லாத நபர்கள் இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு அல்லது ஒரு வேலைக்கு எத்தனை இட்லி எடுத்துக் கொள்கிறோம் என்பது அவரது உடல் எடை, உயரம், உடல் உழைப்பு போன்றவற்றை பொறுத்து மாறுபடுகிறது.

இதையும் படிங்க: கலர் மாறிய வெள்ளியை புதுசுபோல ஜொலிக்க வைக்கணுமா! இப்படி ஒரு முறை செய்தாலே போதும்....

Health tips in tamil

இதையும் ட்ரை பண்ணுங்க

காலை நேர உணவில் தேவைப்பட்டால் புரதச்சத்து நிறைந்த முட்டை, உலர் திராட்சை, நட்ஸ் உள்ளிட்டவற்றையும் சேர்க்கலாம். அதுபோல முந்தைய நாளின் இரவே தானியங்களை முளைகட்டிவைத்து உண்பது, தானியங்கள் கலந்த உணவுகளை உண்பது, பாதம் உள்ளிட்டவற்றை ஊறவைத்து அதனை அடுத்த நாள் காலையில் உண்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

மாவுச்சத்து மட்டும் போதாது

காலை வேளையில் எடுத்துக்கொள்ளும் உணவு தான் அந்த நாளுக்கான தேவையான சத்துக்களை வாரி வழங்கும். தினமும் காலை மாவுச்சத்து மட்டும் உண்பதன் மூலம் இதர சத்துக்கள் குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மதிய நேரத்தில் வெறும் சாப்பாடு, குழம்பு மட்டும் சாப்பிட்டால் போதாது. அதிக காய்கறிகளை உண்பது அவசியம். சாப்பாடு அதிகம் எடுத்து கொள்வதற்கு பதிலாக கூட்டு, பொரியலின் காய்களை அதிகம் உண்ண வேண்டும்.