உலகம் லைப் ஸ்டைல்

கழிவறைக்குள் சென்ற மாணவிகள் திடீரென அலறி அடித்து ஓடிய சம்பவம்.! 16 பேர் மருத்துவமனையில் அனுமதி.! ஜெர்மன் நாட்டு பள்ளியில் நடந்த சம்பவம்.!

Summary:

Wasps attack German school injuring 16 kids

பள்ளியின் இடைவேளையின் போது கழிவறைக்கு சென்ற மாணவ மாணவிகள் திடீர் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடிய சம்பவம் ஜெர்மன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் வழக்கமான பள்ளி இடைவேளையின்போது மாணவ-மாணவிகள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அமைந்திருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது ழிவறைக்குள் கட்டி இருந்த குளவிக் கூட்டில் இருந்து வெளியேறிய குளவிகள் கழிவறைக்குள் சென்ற மாணவ மாணவிகளை விரட்டி விரட்டி கொத்து தொடங்கியுள்ளது. 

இந்த சம்பவத்தில் 16 மாணவ மாணவிகள் குளவிகளால் கொத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியின் விளையாட்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயின்ற 1200 மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

ஜெர்மனியில் குளவிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் ஆகும். யாரேனும் குளவிகளை கொன்றால் அவர்களுக்கு 5 ஆயிரம் யூரோக்கள் முதல் 50 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் உள்ளது. அதேநேரம் குளவிகள் தங்களை கொட்டும் பட்சத்தில் ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க குளவியை கொல்லவும் அனுமதி உண்டு.


Advertisement