பெண்களே.... வீட்டு வாசலலுக்கு எதிரே இந்த ஒரு பொருள் இருக்கவே கூடாதாம்...! வறுமைக்கும் குடும்பச் சண்டைக்கும் இதான் முக்கிய காரணமாம்!!!
வீட்டின் பிரதான வாசல் என்பது வெறும் நுழைவாயில் மட்டுமல்ல, குடும்பத்தின் அமைதி மற்றும் வளத்துடன் தொடர்புடைய முக்கிய இடமாகவும் வாஸ்து சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. குறிப்பாக வாஸ்து சாஸ்திரம் கூறும் சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றினால், வீட்டில் நேர்மறை சூழல் நிலைக்கும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
நிலைப்படிக்கு ஏன் முக்கியத்துவம்?
பண்டைய காலங்களில் பெரும்பாலான இந்திய வீடுகளில் பிரதான வாசலில் நிலைப்படி அமைப்பது வழக்கமாக இருந்தது. வாஸ்து நம்பிக்கையின்படி, அது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. அதேபோல், வீட்டின் பிரதான வாசல் தெரு மட்டத்தை விட சற்று உயரமாக இருப்பது நல்லதாக சொல்லப்படுகிறது. வாசல் தாழ்வாக இருந்தால், அது மன அமைதி மற்றும் உடல்நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாஸ்து தோஷமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டில் மணி பிளாண்ட்டை எப்படி, எந்த திசையில் வைக்கணும் தெரியுமா? அதில் இந்த பொருளை சேர்ந்தால் செல்வ வளம் பெருகும்!!!
வாசலுக்கு எதிரே இருக்கக் கூடாதவை
வீட்டின் பிரதான வாசல் பகுதி எப்போதும் சுத்தமாக இருப்பது முக்கியம் என வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. வாசலுக்கு நேராக முள் செடிகள் அல்லது உடைத்தால் பால் வரும் செடிகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவை குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளையும், பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலையும் உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும், வாசலுக்கு முன்பாக கற்கள், கட்டுமானப் பொருட்கள், குப்பைகள் அல்லது குப்பைத்தொட்டி போன்றவற்றை வைத்து அடைப்பதும் நல்லதல்ல என்று வாஸ்து குறிப்படுகிறது. இத்தகைய அமைப்புகள் தொழில் முன்னேற்றத்துக்கும், வீட்டின் நேர்மறை சூழலுக்கும் தடையாக அமையும் என நம்பப்படுகிறது.
சுத்தமான வாசல் தரும் நேர்மறை சூழல்
வீட்டு வாசலை முழுமையாக மறைக்கும் வகையில் மிக உயரமான, அடர்த்தியான மரங்கள் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். அவை சூரிய ஒளி மற்றும் காற்றின் இயல்பான வருகையை குறைக்கும் என கூறப்படுகிறது. எனவே, புதிய வீடு கட்டுபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே வீட்டில் வசிப்பவர்களாக இருந்தாலும், பிரதான வாசல் மற்றும் நிலைப்படி பகுதியை சுத்தமாகவும், தடையற்ற முறையிலும் பராமரித்தால் குடும்பத்தில் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிலைக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் பார்வையாகும்.