அடேங்கப்பா.. பல்துலக்கும் பேஸ்டை வைத்து வீட்டையும் சுத்தம் செய்யலாமா?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!

அடேங்கப்பா.. பல்துலக்கும் பேஸ்டை வைத்து வீட்டையும் சுத்தம் செய்யலாமா?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!



tooth-paste-use-to-toilet-and-bathroom-cleaning

 

தினமும் நம்மை சுற்றியிருக்கும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், நமது வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். விடாப்படியான கறைகள், டைல்ஸ் கறைகள், உப்பு கறைகள் போன்றவற்றையும் கழிப்பறை டைல்ஸ் மற்றும் டாய்லட்டை சுத்தம் செய்ய மிகவும் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். 

இவற்றை 10 நிமிடத்தில் பளபளவென எப்படி மினுக்க வைப்பது என்று தற்போது காணலாம். நாம் தினமும் பல்தேய்க்க பயன்படுத்தும் பற்பசை அதிக நுரைக்க செய்யும் தன்மை கொண்டது. இதிலிருக்கும் மூலக்கூறுகள் பற்களில் இருக்கும் அழுக்களை மட்டுமல்லாமல், எனாமல் போன்ற வழவழப்பு தன்மையுள்ள அனைத்து பொருட்களிலும் சுத்தம் செய்ய பயன்படுகிறது. 

இதனால் விடாப்படியான அழுக்குகளையும் சுலபமாக நீக்கிவிடலாம். பற்பசையில் இருக்கும் மூலக்கூறுகள் டைல்ஸ், பீங்கான், கடினமான பிளாஸ்டிக் போன்றவற்றில் உள்ள அழுக்குகளையும் விடாப்படியான எண்ணெய் கரைகளையும் சுலபமாக சுத்தம் செய்துவிடும்.

முதலில் பற்பசையில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்க வேண்டும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்துவைத்து தேவைப்படும்போது எடுத்து சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம். கழிப்பறையை பொறுத்தவரையில் தினமும் குளிக்கும்பொழுது சுத்தம் செய்து விடுவது வேலையை மிச்சப்படுத்தும்.

வாரம் ஒருமுறை கடினமான கரைகள் மற்றும் கிருமிகளை தரமான லிக்விட்களை பயன்படுத்தி சுத்தம் செய்வது ஆரோக்கியமளிக்கும். குளிக்கபோகும் முன் அனைத்து இடங்களிலும் ஸ்பிரே செய்து பிரஷ் கொண்டு அழுத்தம் செய்து கழுவினால் பளபளவென மாறிவிடும்.

அதுபோல கிச்சன் சுவற்றில் இருக்கும் டைல்ஸ்களிலும், விடாப்படியான எண்ணெய் கரைகளையும் வாரம் ஒரு முறை பற்பசை ஸ்ப்ரே செய்து சுத்தமான துணியால் துடைத்து எடுத்தால் எண்ணெய் பிசுக்குகள், அழுக்குகள் அனைத்தும் வெளிவந்து விடும். ஸ்பிரே செய்த பின்பு காட்டன் துணையால் துடைப்பது மிகவும் நல்லது.

இது மிக்ஸி ஜாருக்கு பின்னால் இருக்கும் அழுக்குகளை நீக்கவும் உதவுகிறது. பாத்திரம் கழுவும் சிங்க்-கை தூங்கப்போகும் முன் இவ்வாறு ஸ்பிரே செய்துகொண்டு தேய்த்தால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சி கூட வராது. அழுக்குகளும் நீங்க சுத்தமாகிவிடும். சீப்புகளை இந்த ஸ்பிரேயை பயன்படுத்தலாம்.