BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கிடு கிடுவென எகிறும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். அந்த சமயத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது.
இதன் காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால், தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்று பார்ப்போம்.
இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,720-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 67.40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.