லைப் ஸ்டைல்

வாரத்தின் கடைசி நாளில் உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Summary:

Today's gold rate in chennai

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி தங்கத்தில் மூதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. வாரத்தின் கடைசி நாளாகி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,897 க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 4,912க்கு விற்பனையாகிறது.

சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் தங்கத்தின் விலை  39,296க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,142லிருந்து இன்று ரூ.5,157 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 41,136 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 120 ரூபாய் உயர்ந்து 41,256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 


Advertisement