
throat pain problem
பொதுவாக மழைக்காலங்களில் நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. இதனால் நாள் முழுவதும் பெரும் துன்பத்திற்கு உள்ளாகிறோம்.
சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இதிலிருந்து வெளியேற இதோ எளிய டிப்ஸ்.
1. வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலியும் நீங்கும்.
2. திரிகடுகம் என அழைக்கப்படும் சுக்கி, மிளகு, திப்பிலி மூன்றையும் வறுத்து நன்கு பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும்.
3. தொண்டை வலி போக, துளசி இலை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.
Advertisement
Advertisement