குட்டீஸுக்கு பிடித்த சுவையான தினை கருப்பட்டி அல்வா செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே குழந்தைகளை மகிழ்விக்க அசத்தல் டிப்ஸ்.!

குட்டீஸுக்கு பிடித்த சுவையான தினை கருப்பட்டி அல்வா செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே குழந்தைகளை மகிழ்விக்க அசத்தல் டிப்ஸ்.!



thinai-karuppatti-halwa-for-chutties

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே வகையான உணவுகளை செய்து, அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறீர்களா?. சுவையான தினை கருப்பட்டி அல்வா செய்து கொடுக்கலாம். அதைப்பற்றி இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கருப்பட்டி - 150 கிராம்,

தினை அரிசி - 200 கிராம்,

முந்திரி - 20 கிராம்,

உலர் திராட்சை - 20 கிராம்,

பாதம், பிஸ்தா - தலா 20 கிராம்,

நெய் - 100 கிராம்,

தண்ணீர் - 250 மி.லி,

ஏலக்காய் தூள் - தேவையான அளவு,

சுக்கு - 1 கரண்டி

health tips

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட தினை அரிசியை ௬ மணிநேரம் ஊறவைத்து, கருப்பட்டியை நன்றாக பொடியாக்கி எடுத்து கொள்ள வேண்டும். 

பின் கருப்பட்டியில் தண்ணீர் சேர்த்து அதனை பாகு போல் காய்ச்சி எடுக்க வேண்டும். அரிசி ஊறிய பின்னர், அதனை அரைத்து எடுத்து வைத்து பால் எடுக்க வேண்டும்.

பாலை 15 நிமிடம் தெளியவிட்டு, நீரை எடுத்துவிட வேண்டும். பின்னர், வானெலியில் தண்ணீர் ஊற்றி தினை மாவு, கருப்பட்டி பாகு, நெய் ஊற்றி அல்வா பதத்திற்கு தயார் செய்ய வேண்டும். 

அல்வா பதத்திற்கு வந்ததும் இறுதியில் நெய் சேர்த்து பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்ஸை போன்றவற்றை சேர்த்து ஆறியதும் துண்டுதுண்டாக வெட்டி பரிமாறினால் சுவையான தினை கருப்பட்டி அல்வா தயார்.