உஷார் மக்களே.. அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்... தப்பிக்க இதை செய்யுங்கள்.!
சமீப காலமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அம்மை நோய் மற்றும் நீர் இழப்பு காரணமாக ஏற்படக்கூடிய பல்வேறு நோய்கள் பெருமளவில் பொதுமக்களை தாக்கி வருகின்றது. இதில், அதிகப்படியாக குழந்தைகளும், முதியவர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். இந்த தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாம் நீர்சத்து அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், நீர்சத்தை உடலில் தக்க வைக்க முக்கிய ஆதாரமாக இருப்பது இளநீர் தான். இளநீரை நாம் அருந்துவதால் நம் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் கிடைக்கின்றன. மேலும்,இதிலுள்ள மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை உடலுக்கு ஆற்றலை வழங்கி வெயிலின் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது.

அடுத்ததாக தர்பூசணி உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதில் அதிகப்படியான நீர் சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு பெருமளவில் நன்மைகளை கொடுக்கிறது. நுங்கு இதுவும் இளநீர் போல அதிகப்படியான நீர் சத்துக்களை உடலுக்கு வழங்குவதுடன் நீண்ட நேரம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க இது உதவும்.
இதையும் படிங்க: "நீரின்றி அமையாது உலகு." எப்போது? எப்படி..? எவ்வளவு? குடிக்க வேண்டும்.!
வெயில் காலங்களில் ஏற்படும் வயிற்று கோளாறுகளை நீக்க மோர் உதவுகிறது. இது உடலில் நீர்ச்சத்தை வழங்குவதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.

எலுமிச்சை சாறு வெயில் காலங்களில் உடலுக்கு எலக்ட்ரோ லைட்டுகளை வழங்குகிறது. மேலும், இதில் இருக்கும் விட்டமின் சி நம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
அடுத்ததாக மாம்பழச்சாறு இதை அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கின்றன. எனவே இது நாம் இழக்கும் ஆற்றலை உடனடியாக உடலுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது.
இதையும் படிங்க: எப்போதும் பசித்துக்கொண்டே இருக்கிறதா.? உஷார்.. இந்த பிரச்சனையாக இருக்கலாம்.!