கோவில் வெண்பொங்கலை வீட்டில் சுவையாக செய்யலாமா?.! ருசியான கோவில் வெண்பொங்கல் ரெசிபி இதோ..!

கோவில் வெண்பொங்கலை வீட்டில் சுவையாக செய்யலாமா?.! ருசியான கோவில் வெண்பொங்கல் ரெசிபி இதோ..!



temple-venpongal-recipe

பொதுவாகவே கோவிலில் கொடுக்கப்படும் வெண் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். இதனை வீட்டில் செய்தால் எப்படி இருக்கும் என்று பலரும் யோசித்துப் பார்த்துள்ளனர். தற்போது வீட்டில் வெண்பொங்கல் எப்படி செய்வது என்பது பற்றி காணலாம்.

தேவையான பொருட்கள் :

மிளகு - 1 தேக்கரண்டி 
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி 
நெய் - 3 தேக்கரண்டி 
சிறுபருப்பு - 1/4 கப் 
பச்சரிசி - 1 கப் 
முந்திரி பருப்பு - 5 
தண்ணீர் - 4½ கப் 
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

★முதலில் சீரகம் மற்றும் மிளகை இடித்துக் கொள்ள வேண்டும்.

★பின் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

★அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், சிறு பருப்பு மற்றும் அரிசி சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

★பின் ஒரு முறை அவற்றை அலசி எடுத்து குக்கரில் 4½ டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அலசிய அரிசி மற்றும் சிறுபருப்பு சேர்த்து 1 தேக்கரண்டி நெய் சேர்த்து, உப்பு சேர்த்து குக்கரை மூட வேண்டும்.

★அடுத்து குக்கரில் 4 விசில் வந்ததும், தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி நறுக்கி வைத்த இஞ்சி, முந்திரி பருப்பு, கருவேப்பிலை, மிளகு, சீரகம்  ஆகியவற்றை தாளித்து அதனை அரிசியில் சேர்த்து கிளறி விட வேண்டும்.

★பொங்கலை பொறுத்தவரை இறுதியாக தாளிப்பது தான் ருசியாக இருக்கும். அவ்வளவுதான் மிகவும் சுவையான கோவில் வெண்பொங்கல் ரெடி.