மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க ஈஸியான வழிகள்! இன்றே ட்ரை பண்ணுங்க!

Summary:

Tamil health tips for reduce fat and be fit

மனிதனின் உணவு பழக்கவழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. நமது முன்னோர்கள் தாங்கள் உண்பதை விட அதிகாமாக உடல் உழைப்பில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் பலவருடங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர்

ஆனால் இன்றைய இளைஞர்கள் உடல் உழைப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் கடைகளில் கண்ட பொருட்களை வாங்கி சாப்பிடுவது, பாஸ்ட் புட் என்ற பெயரில் வேகாத பொருட்களை சாப்பிடுவது இவாறு தங்களது ஆரோக்கியத்தை தாங்களே கெடுத்துக்கொள்கின்றனர்.

அதன் விளைவுதான் உடல் எடை கூடி உடல் பருமனாவது.இதை எப்படி சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம்.

பூண்டு கஞ்சி:

இந்த கஞ்சியை மதிய உணவாகச் சாப்பிட்டால். கொழுப்பு குறைவதுடன். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

தேவையானவை:

பூண்டு – 10-15 பல் (தோலுரிக்கவும்)
வறுத்து, உடைத்த புழுங்கல் அரிசி – ஒரு கப்
சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் (உடைக்கவும்)
வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு,
இந்துப்பு – தேவையான அளவு
மோர் – ஒரு கப்
தண்ணீர் – 4 கப்.

செய்முறை:

உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 4 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து அருந்தலாம்.

புதினா – கொத்தமல்லி மணப்பாகு:

இந்த பாணத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் 2 டேபிள்ஸ்பூன் மணப்பாகுடன் முக்கால் டம்ளர் வெந்நீர் சேர்த்துக் கலந்து குடித்தால் ஊளை சதை குறையும்.

தேவையானவை:

புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கட்டு
துருவிய வெல்லம் – ஒரு கப்,
தோல் சீவிய இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு,
எலுமிச்சைப்பழம் – 2 (சாறு பிழியவும்),
இந்துப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:

புதினா, கொத்தமல்லித்தழையுடன் இஞ்சி சேர்த்து தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து வடிகட்டவும்.

வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்த பின் வடிகட்டிய சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

அதனுடன் இந்துப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சேகரிக்கவும். இதை வாரம் ஒரு முறை தயார் செய்து பயன்படுத்தலாம்.


Advertisement