லைப் ஸ்டைல்

மனிதனிடம் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்..! கல்நெஞ்சையும் கறையவைக்கும் வைரல் வீடியோ.!

Summary:

Squirrel asking for water viral video

தாகத்தால் தவித்த அணில் ஒன்று மனிதர்களிடம் தண்ணீரை கெஞ்சி கேட்டு குடித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுஷாந்த நந்தா அவர்கள் அவ்வப்போது பல சுவாரசியமான வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அணில் ஒன்று சிறுவன் ஒருவனிடம் கெஞ்சி கேட்டு தண்ணீர் அருந்தும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

சுமார் 41 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தண்ணீர் பாட்டிலுடன் வருவதை பார்த்த அணில் ஒன்று சிறுவனை பின்தொடர்ந்து சென்று தனது முன்னங்கால்களை மேலே தூக்கி தண்ணீர் பாட்டிலை பார்த்து தண்ணீர் வேண்டும் என்பதுபோல் கேட்கிறது.

முதலில் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து அந்த சிறுவன் நகர, அவனை பின்தொடர்ந்துவந்து அணில் மீண்டும் தண்ணீர் கேட்கிறது. பின்னர் அந்த சிறுவன் பாட்டிலில் உள்ள நீர் முழுவதையும் அந்த அணிலுக்கு கொடுக்க, அதை பருகிவிட்டு அணில் அங்கிருந்து நகர்கிறது. அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.


Advertisement